அரசியல் பிரமுகர்களுக்கு விருந்தாக்கப்பட்ட நாகர்கோவில் காசியின் காதலிகள்..? சிக்கிய லேப்டாப்! அடுத்தடுத்து கிளம்பும் பகீர் லீலைகள்!

பள்ளி சிறுமிகள் முதல் பெண் மருத்துவர் வரை 70க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஏமாற்றி அந்தரங்க வீடியோக்களை எடுத்து அதன்மூலம் பணம் பறித்து வந்த காசி என்கிற சுஜியின் லேப்டாப் தற்போது போலீசாரின் கைகளில் சிக்கியுள்ள நிலையில் அதிலிருந்து இந்த வழக்கிற்கு சம்பந்தப்பட்ட பல ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் தங்கப்பாண்டியன். இவர் அந்தப் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் பெயர் காசி. கல்லூரி படிப்பை முடித்த காசிக்கு வேலை ஏதும் சரியாக அமையாததால் தன்னுடைய தந்தையின் கடையிலேயே அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார். பார்ப்பதற்கு அமைதியான சாதுவான பிள்ளையாக காட்சியளிக்கும் காசி மிகப்பெரிய காமக்கொடூரன் என்பது தற்போது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.

பள்ளி சிறுமிகள் முதல் பெண் மருத்துவர் வரை 70க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோக்களையும் புகைப்படங்களை எடுத்து அதை வைத்து மிரட்டி அவர்களை தன்னுடைய இச்சைக்குப் பயன்படுத்தி இருக்கிறார் காசி. அதுமட்டுமில்லாமல் அவர்களை மிரட்டி பணத்தையும் பறித்து இருக்கிறார். காசி பொதுவாகவே சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர் ஆவார். தன்னுடைய ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது , ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வது போன்ற புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நல்லவர் போல் நடித்து அனைவரையும் தன் வசம் ஈர்த்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த இளம் பெண்கள் பலரும் இவர் மிகவும் நல்லவர் போல என்று இவரிடம் முதலில் பேச ஆரம்பித்துள்ளனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடன் காசி நெருக்கமாக பழக ஆரம்பித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர்களுடன் நெருக்கமாக பேசும் போன் கால்களை தன்னுடைய மொபைலில் ரெக்கார்ட் செய்து இருக்கிறார். பின்னர் அந்த பெண்களிடம் தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை காண்பித்து மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்திருக்கிறார் காசி. இவ்வாறாக காசி 70க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் பறித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய காதல் வலையில் சிக்கும் பெண்களை தன்னுடைய காம பசி தீர்க்கும் பெண்களாகவும் பயன்படுத்தியிருக்கிறார் காமக்கொடூரன் காசி. உச்சகட்டமாக பெண் மருத்துவர் ஒருவரையும் தன்னுடைய காதல் வலையில் சிக்க வைத்திருக்கிறார் காசி. அந்தப் பெண் மருத்துவரை உருகி உருகி காதலிப்பதாக அவரை முதலில் நம்ப வைத்திருக்கிறார். பின்னர் தன்னுடைய மாமாவிற்கு உடல் நிலை சரி இல்லை என்று கொஞ்சம் கொஞ்சமாக பெண் மருத்துவரிடம் இருந்து பணத்தை கறக்க ஆரம்பித்திருக்கிறார். இப்படியே செல்ல செல்ல ஒரு கட்டத்தில் தன்னுடைய செல்போன் எண்ணை அந்த பெண் மருத்துவரின் வங்கிக்கணக்கில் இணைக்கும் அளவிற்கு இவர்கள் இருவரது பழக்கம் நீண்டுள்ளது.

இந்நிலையில் ஒருநாள் பெண் மருத்துவர் காசி என்கிற சுஜியின் செல்போனை தற்செயலாக எடுத்து பார்த்து இருக்கிறார். அப்பொழுது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது காமக்கொடூரன் காசி என்கிற சுஜி, பல பெண்களுடன் நெருக்கமாகவும் ஆபாசமாகவும் இருக்கக்கூடிய புகைப்படங்களும் வீடியோக்களும் அதில் இருந்துள்ளது. இதனை பார்த்த அந்த பெண் மருத்துவர் மிகவும் அதிர்ச்சியடைந்து இதனைப்பற்றி அந்த காமக்கொடூரன் இடம் கேட்டிருக்கிறார். தன்னைப் பற்றிய உண்மைகள் எல்லாம் அந்தப் பெண் மருத்துவருக்கு தெரிய வந்து விட்டது என அறிந்துகொண்ட காசி உடனடியாக அந்தப் பெண் மருத்துவரை மிரட்ட ஆரம்பித்து இருக்கிறார். பின்னர் எனக்கு தேவையான பணத்தை நீ தர வில்லை என்றால் உன்னுடைய புகைப்படத்தை மார்பிங் செய்து அதனை சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். 

காசியின் மிரட்டலுக்கு அசராத அந்த பெண் மருத்துவர் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று கறாராக கூறியிருக்கிறார். உடனே காசி தன்னிடமிருந்த போலியான அக்கவுண்ட்டை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் மருத்துவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து பதிவேற்றம் செய்திருக்கிறார். இதனை பார்த்து அந்த பெண் மருத்துவர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத்துக்கு ஆன்லைன் மூலமாக புகார் அனுப்பியுள்ளார்.  எஸ்.பி.ஸ்ரீநாத் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை போலீசார் சுஜி என்ற காசியை கைதுசெய்து விசாரணை வலையில் கொண்டுவந்தனர்.

அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து அதனை திறந்து பார்த்த பொழுது அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 70 ற்கும் மேற்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவிகள் முதல் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் வரை பலரது அந்தரங்க வீடியோக்களை அவரது செல்போனில் வைத்திருந்திருக்கிறார் காசி. இதன் மூலம் காசி இடம் பல பெண்கள் சிக்கியுள்ளனர் என்பதை போலீசார் அறிந்து கொண்டதால் உடனடியாக தனிப்படை அமைத்து அதனை ஏ.எஸ்.பி. ஜவகர் தலைமை தாங்கி இந்த வழக்கை விசாரிக்குமாறு எஸ்.பி.ஸ்ரீநாத் உத்தரவிட்டிருக்கிறார். இந்நிலையில் காசி என்கிற சுஜியால் ஏமாற்றப்பட்ட பெண்கள் போலீசாரிடம் தைரியமாக புகார் அளிக்கலாம் என்றும் அவர்களது புகார் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் ஏ.எஸ்.பி. ஜவகர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் எஸ்.பி.ஸ்ரீநாத் அவருடைய தனிப்பட்ட செல்போன் எண் மூலம் (9498111103) காசி என்கிற சுஜியால் ஏமாற்றப்பட்ட பெண்கள் தைரியமாக தொடர்பு கொண்டு புகாரை அளிக்கலாம் என கூறியிருக்கிறார். மேலும் இந்த வழக்கை பற்றி ஏ.எஸ்.பி. ஜவகர் கூறுகையில் தற்போது நாங்கள் காசி என்கிற சுஜியை தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம். அவர்மீது 354,354C,354D,385,420 IPC r/w 66A,66E,67 of IT Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் பொழுது அவரின் லேப்டாப் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனை அன்லாக் செய்து அதில் காசி என்கிற சுஜி உடன் தொடர்பில் இருக்கும் நபர்களைப் பற்றியும் நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். ஒருவேளை காசிக்கு பின்னால் பிரபலங்களும் அல்லது அரசியல் பிரமுகர்களும் இருப்பார்களா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். 

விசாரணையின் முடிவில் காசிக்கு உதவியாக இருந்த அரசியல்வாதிகள், முக்கிய பிரபலங்கள் என பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.