அவளை நீயும் கூட யூஸ் பண்ணிக்கோ..! நம்பிய பெண்களை நண்பர்களுக்கு படையல் வைத்த காசி! பரபரக்கும் ஆடியோ லீக்!

நகர்கோவில் காசி, தன்னை நம்பி வந்த பெண்களை தனது நண்பர்களிடம், அவளை நீயும் கூட யூஸ் பண்ணிக்கோ என்று கூறியுள்ள ஆடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் தங்கப்பாண்டியன். இவர் அந்தப் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் பெயர் காசி. கல்லூரி படிப்பை முடித்த காசிக்கு வேலை ஏதும் சரியாக அமையாததால் தன்னுடைய தந்தையின் கடையிலேயே அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார். பார்ப்பதற்கு அமைதியான சாதுவான பிள்ளையாக காட்சியளிக்கும் காசி மிகப்பெரிய காமக்கொடூரன் என்பது தற்போது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.

பள்ளி சிறுமிகள் முதல் பெண் மருத்துவர் வரை 70க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோக்களையும் புகைப்படங்களை எடுத்து அதை வைத்து மிரட்டி அவர்களை தன்னுடைய இச்சைக்குப் பயன்படுத்தி இருக்கிறார் காசி. அதுமட்டுமில்லாமல் அவர்களை மிரட்டி பணத்தையும் பறித்து இருக்கிறார். காசி பொதுவாகவே சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர் ஆவார். தன்னுடைய ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது , ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வது போன்ற புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நல்லவர் போல் நடித்து அனைவரையும் தன் வசம் ஈர்த்திருக்கிறார். இதனால் அப்பாவி பெண்கள் பலரும் காசியின் வலையில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளனர். 

பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பொலிசார் காசியை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் காசியின் நெருங்கிய நண்பரான 19 வயது மிக்க ஜீனோ என்ற இளைஞரையும் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சமீபத்தில் காசி மறைத்து வைத்திருந்த பல பெண்களின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய லேப்டாப்பையும் கண்டறிந்தனர். இந்நிலையில் காசி பல பெண்களை மிரட்டி பணம் பறித்த பொழுது பேசப்பட்ட ஆடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக பெண் ஒருவரை தன்னுடைய நண்பருக்கு படையலிட துணிந்த காசியின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசி அந்த ஆடியோவில், அந்த பெண்ணை நீயும் கூட யூஸ் பண்ணிக்கோ.. எனக்கு பணமும் தந்து ரோட்டுக்கு வந்தும் இருக்காங்க.. எனக்கு அந்த அளவுக்கு அடிமைங்க இருக்காங்க.. என்று தன்னுடைய நண்பரிடம் கூறியிருக்கிறார். இந்த ஆடியோ பதிவில் காசி பேசும் பகுதி மட்டுமே எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் காசி, இது எப்போது பேசினார்? யாரிடம் பேசினார்? என கண்டறியப்படவில்லை. தற்போது காசி பேசியுள்ள இந்த ஆடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது போலீஸார் இந்த ஆடியோவில் பதிவாகியுள்ள குரல் காசி உடையது தானா என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த ஆடியோவை ஏன் போலீசாரிடம் ஒப்படைக்காமல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர் என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை காசிக்கு எதிரானவர்கள் வெளியிட்ட ஆடியோ பதிவாக இருக்குமோ எனவும் பல கோணங்களில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.