என்னோட மாமனாருக்கு வயசே ஆகாது! சமந்தா வெளியிட்ட நாகர்ஜூனா புகைப்படம் வைரல்!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நாகர்ஜுனா தன்னோட 60வது பிறந்தநாளை கடந்த வியாழக்கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடினார் .


தெலுங்கு திரை உலகின் ஜாம்பவானாக கருதப்படும் நடிகர் நாகர்ஜுனா 60வது பிறந்தநாளை தன்னுடைய குடும்பத்தினருடன் மிக விமர்சியாக கொண்டாடினார் . இவர் தனது 60 வது பிறந்த நாளை ஸ்பெயினில் கொண்டாடியதாக கூறப்படுகிறது. பல பிரபலங்களும் நாகார்ஜுனாவை சமூக ஊடகங்களில் வாழ்த்தினர். முக்கியமாக நடிகை மற்றும் மருமகளான சமந்தாவிடம் இருந்து மிகவும் அபிமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்தது. 

நாகார்ஜுனாவின் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டு, அதில் நடிகர் நாகர்ஜுனா நீச்சல் குளத்தில் இருப்பதைக் காணலாம், சமந்தா அந்த புகைப்படத்திற்கு கேப்சனாக "எல்லோரும் நீங்கள் தேடுவதைக் கண்டுபிடித்தீர்கள் ... உங்களைச் சுற்றி இருப்பதால் நான் உங்களைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொண்டேன் .. இது உங்கள் அழகான மனம், உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் கொண்டு வரும் படைப்பாற்றல் மற்றும் நீங்கள் விரும்பும் மக்களின் வாழ்க்கை ... நீங்கள் உங்கள் வயதை தோற்கடித்தீர்கள் என் மாமா ... # மகிழ்ச்சியான பிறந்த நாள். தலைமுறைக்குப் பின் தலைமுறையை நீங்கள் தொடர்ந்து ஊக்குவிப்பீர்கள்..". என்று அந்த செய்தியில் கூறியிருந்தார்.

பாலிவுட் நடிகை ராகுல் ப்ரீத் சிங்கும் நாகார்ஜுனாவை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்: "எப்போதும் அழகான பசுமையான வாழ்வு அமைய நாகார்ஜுனா ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! சிரிப்பும், ஆரோக்கியமும் நிறைந்த ஒரு வருடம் அமைய உங்களுக்கு வாழ்த்துக்கள்." என்று கூறியிருந்தார். டான் , டமாருகம் போன்ற படங்களில் நாகார்ஜுனாவுடன் இணைந்து பணியாற்றிய நடிகை அனுஷ்கா செட்டி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பகிர்ந்தார்: "கிங் # நாகார்ஜுனா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க்கையில் மிகச் சிறந்த வாழ்த்துக்கள் #HBDKingNagarjuna."