அதிசயம் நிகழும்! 2021ல் தமிழக மக்களால் ரஜினி தூள் தூளாகும் அதிசயம் நிகழும்! தெறிக்கவிடும் சீமான்!

தான் என்ன பேசினாலும் அதிசயம் நிகழும் என்ற மிதப்பில் உள்ள ரஜினியை தமிழக மக்கள் தூள்தூளாக்கப் போகிறார்கள் என சீமான் அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு உலக நாயகன் கமலஹாசன் திரைத்துறையில் கால் பதித்து 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கமல் 60 என்ற நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள்ளரங்கில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தின் முதல்வராக மாறுவேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கனவில் கூட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நினைத்து பார்த்திருக்க மாட்டார் . ஆனால் அந்த அதிசயம் நடந்துள்ளது . அந்த அதிசயம் நேற்று நடந்துள்ளது நாளையும் நடக்க உள்ளது என்று கூறினார். 

பின்னர் கோவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றுக்கொண்டு சென்னை திரும்பிய நடிகர்கள் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசியவர், 2021 ஆம் ஆண்டு நிகழப்போகும் தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் நூற்றுக்கு நூறு சதவீதம் செய்வார்கள் என்று கூறினார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடிகர் ரஜினிகாந்த் முதலில் அரசியல் கட்சி ஆரம்பிக்கட்டும். ரஜினி கட்சி துவங்கிய பின்னே அவரது கருத்தைப் பற்றி விரிவாக கூற முடியும் என்று கூறினார் ‌. 

இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சீமான், ரஜினி கூறிய கருத்துக்கு எதிர் கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். "தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும் என்கிற நினைப்பிலும், மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடகவெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம், இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021இல் நடக்கும், நடந்தே தீரும்” என்று பதிவிட்டுள்ளார்.