இந்தியா எங்கள் தேசம் அல்ல..! உள்நாட்டு போர் வெடிக்கும்..! எச்சரிக்கும் சீமான்! பரபர காரணம்!

இந்திய நாடு எங்களது தேசம் இல்லை என்றும் நாங்கள் அனைவரும் தமிழ்தாயின் மக்கள் என்றும் கூறிய நாம் தமிழர் கட்சி சீமான் மத்திய அரசு உள்நாட்டுப் போரை சந்திக்க கூடும் எனவும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற தர்மேந்திர பிரதான், "பாரத் மாதாகி ஜே" என்று கூறுபவர்கள் மட்டும்தான் இந்தியாவில் வாழ முடியும் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவர் கூறிய இந்த கூற்றுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது அதிரடியாக பதில் அளித்துள்ளார். அதாவது நாங்கள் பாரதமாதாவின் பிள்ளைகள் இல்லை தமிழ் தாயின் மக்கள் என்றும் நாங்கள் தமிழ்தாய் வாழ்க என்று தான் கூறுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சீமான் இந்தியா எங்கள் தேசம் அல்ல நாங்கள் இந்திய நாட்டின் குடிமக்கள் . தமிழ் தேசம் தான் எங்கள் தேசம் என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் வெள்ளைக்காரர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட மாநிலங்களை கொண்டதுதான் இந்தியா. அதாவது மாநிலங்களின் அவைதான் இந்தியா என்று சீமான் கூறியிருக்கிறார்.

ஒருவேளை மாநிலங்களின் உணர்ச்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க தவறிவிட்டால் உள்நாட்டுப் போரை அவர்கள் சந்திக்க கூடும் எனவும் நாம் தமிழர் கட்சி சீமான் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சீமானின் இந்த அதிரடியான பேச்சு பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.