தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் நாம் தமிழர் கட்சியை விட காங்கிரஸ் குறைந்த வாக்குகளையே பெறும்! சீமான் அதிரடி!

தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் நாம் தமிழர் கட்சியை விட காங்கிரஸ் கட்சியானது குறைந்த வாக்குகளையே பெறும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார்.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய அரும்பு கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தன்னுடைய சிறை தண்டனையிலிருந்து ஜாமீன் பெற்று வெளிவந்து இருக்கிறார். ஜாமினில் வெளிவந்த அவரை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று சந்தித்தார். அவர்களது சந்திப்பிற்கு 

பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து உரையாடினார்.கொலை வழக்கில் சிக்கிய சந்திரன் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து உள்ளார் என்றும் அவரை விரைவில் சிறையிலிருந்து வெளியிட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார் . மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் அதற்காக நாம் தமிழர் கட்சி சார்பாக போராட்டங்கள் நடைபெற உள்ளது எனவும் அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர் காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். அப்போது பேசுகையில் காங்கிரஸ் கட்சியானது கடந்த 40 ஆண்டுகளாகவே திராவிட கட்சிகளின் மீது குதிரை சவாரி செய்து கொண்டுவருகிறது. ஒருவேளை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் தன்னுடைய பலத்தை காங்கிரஸ் கட்சியால் தெளிவாக பார்க்க முடியும் எனவும் கூறினார் . மேலும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சியை விட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெறும் என்று கூறினார் . இதற்கு சான்றாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை கூறலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.