எங்கள் காலம் வரும்போது காவி கட்டும் பாஜக கூட்டம் இருக்காது! சீமான் பரபரப்பு பேட்டி!

எங்களுக்கும் காலம் வரும் போது காவி கட்டும் பாஜக கூட்டம் இருக்காது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கும்பகோணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய சீமான், சோமாலியா வெனிசுலா எத்தியோபியா போன்ற நாடுகளைப் போல் நம்முடைய நாடு போய்விடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருந்து வருகிறோம்.

ஏற்கனவே மீத்தேன் வாயு எடுக்கிறோம் ஷேல் கேஸ் எடுக்கிறோம் என்று விவசாயத்தை அதிமுகவும் திமுகவும் மாறி மாறி சீர்குலைத்தது நம்மால் மறக்க இயலாது. இதனால் நாங்கள் எப்பொழுதுமே தன்னிச்சையாக தான் தேர்தலில் போட்டியிடுவோம். இதுதான் தங்களுடைய கட்சி கொள்கை எனவும் சீமான் கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் பாஜக மனித குலத்தின் எதிரி எனவும் காங்கிரஸ் இனத்தின் எதிரி என்பதால் அவர்களுடன் கூட்டணி இல்லை எனவும் அவர் கூறியிருந்தார். நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான 117 ஆண்கள் மற்றும் 117 பெண்கள் ஆகியோரின் பட்டியலை வரும் ஜனவரி மாதம் வெளியிடுவோம் என்று சீமான் கூறினார். 

மேலும் பேசிய அவர் திருவள்ளுவர் இருந்தபோது இந்தியாவும் இல்லை இந்து மதமும் இல்லை ஆகையால் எங்கள் காலம் வரும் போது காவி கட்டும் பாஜக கூட்டமும் இருக்காது என்றும் சீமான் கூறினார்.