கொரோனா தொற்று பேரிடர் காலத்தில், ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், ஆரம்ப காலங்களில் பல்வேறு கட்சியினர் மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்துவந்தனர். அதன்பிறகு அத்தனை பேரும் அச்சத்தினால் வீட்டுக்குள் முடங்கிவிட்டனர்.
தன் சொந்த பணத்தில் காங்கேயம் NSN நடராஜ் மூன்று கோடி செலவழித்து கொரோனா நிவாரணம் தருகிறார்! குவியும் பாராட்டுக்கள்!
இந்த நிலையில், காங்கேயம் தொகுதிக்கு உள்ளடங்கிய வெள்ளகோவில், காங்கேயம், சென்னிமலை, குண்டடம், முத்தூர் போன்ற பகுதிகளின் அனைத்து ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் குடும்பங்களுக்கு, ஐந்து கிலோ அரிசி மற்றும் தேங்காய் எண்ணெய்த் தொகுப்பினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,
காங்கேயம் ஒன்றிய கழக செயலாளர் திரு. N S N நடராஜ் சொந்த பணத்தில் மூன்று கோடி ரூபாய் செலவழித்து கொரோனா நிவாரணம் வழங்கி வருகினார். இதனை அறிந்த .அ.தி.மு.க.வினர் நடராஜ்ஜுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.