தம்பி அவனை முடிச்சிடுங்கடா! மனைவியால் NLC அதிகாரிக்கு நடுக்காட்டில் அரங்கேறிய பயங்கரம்!

என்.எல்.சி பொது நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியரை அவருடைய மனைவியை அடித்து கொலை செய்திருக்கும் சம்பவமானது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் சின்னசேலம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகேயுள்ள நைனார்பாளையம் கீழ்குப்பத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் நேற்றிரவு சேலம்-விருதாச்சலம் நெடுஞ்சாலையில் வாகன ரோந்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவ்வழியே சென்ற ஒருவர் சிறிது தூரம் தள்ளி ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள காரில் இருந்து புகை வெளியாகி கொண்டிருப்பதாக காவல்துறையினரிடம் தெரிவித்தார். கண்ணாடிகள் மூடிய நிலையில் இருந்தபோது புகை வெளியாவது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரின் கண்ணாடிகளை உடைத்த காவல்துறையினர் உள்ளே ஒரு சாக்குப்பை இருப்பதை கண்டுபிடித்தனர். திறந்து பார்த்தபோது ஒரு ஆண் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ந்தனர். அடையாளம் காண்பதற்கு காவல் துறையினர் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினர். கார் பதிவெண் மூலமாக நெய்வேலியை சேர்ந்த கார் என்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் விசாரித்ததில் இறந்தவர் என்.எல்.சி பொது நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றும் பழனிவேல் என்பதை கண்டறிந்தனர். இவருடைய மனைவியின் பெயர் அஞ்சலை. கடந்த சில மாதங்களாக கணவன் மனைவியிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. தினசரி அஞ்சலையை பழனிவேல் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அஞ்சலை வருத்தத்துடன் நிகழ்ந்தவற்றை தன் தம்பிகளிடம் தெரிவித்துள்ளார். 

ஆத்திரமடைந்த அவர்கள் பழனி வேலை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். நேற்று இரவு பழனிவேலின் வீட்டிற்கு திடீரென சென்ற அஞ்சலையின் சகோதரர்கள் அஞ்சலையின் உதவியோடு பழனிவேலை பலமாக தாக்கி கொலை செய்தனர்.

பின்னர் அவருடைய உடலை சாக்குப்பையில் கட்டி அவருடைய காரிலேயே ஏற்றி நெடுஞ்சாலையோரம் வரை வந்துள்ளனர். காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். யாரும் பார்க்காத போதே அங்கிருந்து புறப்பட்டுளளனர். காவல்துறையினர் அஞ்சலை மற்றும் அவருடைய சகோதரர்கள் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.