6 ஆண்டுகளாக சென்னையில் பதுங்கல்! தீவிரவாதியை பொறி வைத்து பிடித்த NIA & போலீஸ்!

கடந்த 2013 ஆம் ஆண்டு பீகார் மாநில குண்டு வெடிப்பில் தொடர்புடைய வடமாநில இளைஞர் ஷேக் அசதுல்லா சென்னை நீலாங்கரை பகுதியில் கைது.


கடந்த 2013 ல் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பத்தில் தொடர்புடையா தீவிரவாதிகளை கொல்கத்தாவை சேர்ந்த தனிப்படை போலிசார் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷேக் அசதுல்லா சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அண்ணா நகர் முதல் தெருவில் பதுங்கி இருப்பதாக இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

எனவே சென்னைக்கு விரைந்த கொல்கத்தா தனிப்படை போலிசார் நீலாங்கரை காவல் துறை அதிகாரிகளின் உதவியோடு ஷேக் அசதுல்லாவை சுற்றி வலைத்து பிடித்தனர். பின்னர் இரவு முழுவதும் நீலாங்கரை காவல் நிலையத்தில் வைத்து விசாரனை மேற்கொண்டனர்.

மேலும் துரைப்பாக்கம் காவல் உதவி ஆணையர் அலுவலத்தில் வைத்து விசாரணை நடத்திய பின் குற்றவாளியை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மேற்க்கு வங்க போலிசாரிடம் ஒப்படைத்தனர்.