மணமாகி ஒன்றரை வருடம்! தவிக்கவிட்டுச் சென்ற கணவன்! புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு! வீடியோ காலில் கூறிய கடைசி வார்த்தை!

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் நீட் பயிற்சியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆனது திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் சந்தாபுரம் எனுமிடம் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள என்.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவருடைய மனைவியின் பெயர் சரஸ்வதி. இத்தம்பதியினருக்கு அனிதா என்ற மகள் உள்ளார். அனிதாவின் வயது 28. அனிதா நீட் தேர்வு மையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒத்தக்கால் மண்டபம் எனுமிடம் உள்ளது. இப் பகுதியை சேர்ந்தவர் கணேசன். கணேசனின் வயது 32. சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் கணேசனுக்கும் அனிதாவுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில மாதங்கள் புகுந்த வீட்டில் அனிதா தங்கியிருந்தார்.

அனிதாவுக்கும் கணேசனின் குடும்பத்தாருக்கும் மிகுதியாக சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்ததால், வாடகைக்கு வீடு எடுத்து திருப்பூர் மாவட்டத்தில் தனி குடித்தனம் செய்து வந்தனர். தனிக்குடித்தனம் வந்த உடனே கணவன் மனைவிக்கு இடையே பலத்த தகராறுகள் ஏற்பட்டுள்ளன. சிலமுறை தகராறுகள் கைகலப்பு வரை சென்றுள்ளன. இதனால் கணவன் மனைவி இருவருமே மனக் கசப்போடு வாழ்ந்து வந்தனர்.

சம்பவத்தன்று அனிதாவின் தம்பியான அஷோக் அவருக்கு கால் செய்துள்ளார். தன் தம்பியிடம் கதறி அழுதபடி தனக்கு வாழ விருப்பம் இல்லாததாக கூறியுள்ளார். அசோக்கிடம் வீடியோ கால் செய்து மின்விசிறியில் துப்பட்டாவை போட்டுள்ளார். இதனால் ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதாக உணர்ந்த அசோக் தன் தந்தைக்கு கால் செய்து கூறியிருந்தார்.

அனிதாவின் தந்தை வீட்டுக்கு சென்று பார்த்தபோது. அவர் தூக்கில் தொங்கி பிணமாக கிடந்துள்ளார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அனிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி 1 1/2 ஆண்டுகளை நிறைவு பெற்றுள்ளதால் அப்பகுதி ஆர்.டி.ஓ சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவமானது திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.