என்டிடிவி EXIT POLL! தமிழகத்தில் யாருக்கு எத்தனை சீட் தெரியுமா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று ndtv வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.


இந்தியாவின் மிக மூத்த செய்தி நிறுவனம் ndtv. ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் நம்பகத்தன்மை மிகுந்த ஒன்று என பெயர் பெற்றது. தற்போதைய மோடி அரசுக்கு எதிராக துணிச்சலாக செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளில் ndtv மட்டுமே முதன்மையானது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த என்டிடிவி தொலைக்காட்சி வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் அந்த ஏழு கட்டங்களைத் வாக்களித்த அவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி தற்போது ndtv வெளியிட்டுள்ளது.

அதே போல் தமிழகத்திலும் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தபோது ndtv சார்பில் கருத்துக்கணிப்பு. அந்த முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது ndtv.

அதன்படி தேர்தல் நடைபெற்ற மொத்தமுள்ள 39 தொகுதிகளில் பாஜக கூட்டணி அதாவது அதிமுக தேமுதிக பாமக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெறும் என்றும் பிற கட்சிகள் இரண்டு இடங்களில் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக ndtv தெரிவித்துள்ளது.