வாங்கிய கடனை திருப்பித்தரவும் ஒரு நேரம் இருக்குதுங்க! இந்த நேரங்களில் கொடுத்தால் மீண்டும் கடன் வாங்கவே வேண்டாம்!

கடன் இல்லாத வாழ்க்கை இல்லை என்ற நிலை நிலவிக்கொண்டு வருகிறது.


வாங்கிய கடனை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கும் பட்சத்தில் முழுகடனையும் விரைவில் அடைக்க இயலும். அந்த குறிப்பிட்ட நேரம் என்பது 'மைத்ர முகூர்த்தம்" ஆகும்.செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்னம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் எனப்படும். 

செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சக லக்னம் அமைந்துள்ள நேரமும் மைத்ர முகூர்த்தமாகின்றது. இவ்வாறு செவ்வாய்க்கிழமைகளில் மைத்ர முகூர்த்தம் அமைவது மிகவும் சிறப்பானது. செவ்வாய்க்கிழமை அல்லாத அஸ்வினி நட்சத்திரம் உள்ள நாளில் மேஷ லக்னத்திலும், அனுஷம் நட்சத்திரம் உள்ள நாளில் விருச்சக லக்னத்திலும் கடன் அடைக்கலாம். மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதுபோன்று வரும். 

2019-ஆம் ஆண்டு மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள் : 

3.10.2019 வியாழன் காலை 9 முதல் 11 வரை. 14.10.2019 திங்கள் மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை  30.10.2019 புதன் காலை 8.48 முதல் 10.48 வரை  9.11.2019 சனி காலை 6.04 முதல் 6.36 வரை மற்றும் மாலை 4.36 முதல் 6.36 வரை  11.11.2019 திங்கள் மாலை 4.28 முதல் 6.28 வரை 27.11.2019 புதன் காலை 6.51 முதல் 8.51 வரை  8.12.2019 ஞாயிறு மதியம் 2.47 முதல் மாலை 4.47 வரை 24.12.2019 செவ்வாய் காலை 4.40 முதல் 6.40 வரை 

மைத்ர முகூர்த்த நேரத்தில் கடனில் ஒரு பகுதியை அடைப்பதன் மூலம் முழுகடனையும் விரைவில் அடைத்து நல்வாழ்க்கை வாழ்வோம்.!