கடந்த 15 வருடங்களாக கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் கால் பதித்துள்ளார். தன் வெற்றிக்கு தன் மனைவியே முக்கிய காரணம் என்று பெருமிதமாக கூறியுள்ளது அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
என்னை அந்த பெண் தான் சரியாக ஹேண்டில் செய்வார்! தனுஷ் சொல்லும் சீக்ரெட்!
நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மனைவியின் பெயர் ஐஸ்வர்யா என்பதாகும். நடிகர் தனுஷின் முதல் ஹாலிவுட் படமான " தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் பகிர்" ("the extraordinary journey of fakir") இன்று ஹாலிவுட் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடித்ததற்கு வாழ்த்து கூறும் வகையில் சமீபத்தில் அவருடன் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது அவர் தன் வெற்றிக்கு தன் குடும்பத்தில் இருந்த ஒவ்வொருவரும் காரணம் என்று கூறினார்.
மேலும் கூறுகையில், "ஐஸ்வர்யா எனக்கு அதீத ஒத்துழைப்பு தருகிறார். அவர் ஒரு பிரம்மாண்டமான பெண். அவர் இல்லையேல் என்னால் மாபெரும் வெற்றிகளை அடைந்திருக்க இயலாது" என்று தன் மனைவியை போற்றி புகழ்ந்தார்.
மேலும், திரைப்படங்களில் வரும் வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாகவே பார்க்கும் பக்குவத்தை 17 வருடங்களில் தான் கற்று கொண்டதாக கூறினார். தனக்கு தன் அம்மா மற்றும் மகனிடம் பெரிய அளவிற்கு பாசம் உள்ளதாக மனம் திறந்தார். தன் மகனுடன் ஒன்றாக கழிக்க போதிய நேரம் இல்லை என்றும், ஒன்றாக இருக்கும்போது நண்பர்கள் போலவே இருப்போம் என்று கூறி பேட்டியை நிறைவு செய்தார்.
தனுஷின் ஹாலிவுட் பயணம் வெற்றி அடைய ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை பரிமாறியுள்ளனர்.