நடந்ததை எல்லாம் மறந்துடலாம்..! வா சேர்ந்து வாழ்வோம்..! கண் கலங்கிய மகாலட்சுமியின் கணவன்! அப்போ ஈஸ்வர் நிலைமை?

புகழ்பெற்ற சின்னத்திரை நடிகைகளில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொள்ளும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்துகிறது.


தற்போது பிரபல சீரியல்களில் வில்லியாக வலம் வரும் நடிகைகளில் முதன்மையானவர் மகாலட்சுமி. கடந்த 8 வருடங்களாக பல்வேறு சீரியல்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். "அரசி" என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து  வைத்தார். "தாமரை", "வாணி ராணி", "தேவதை கண்டேன்" ஆகிய சீரியல்களில் நடித்து மேலும் புகழ் பெற்றார்.

இந்நிலையில் 2016-ஆம் ஆண்டில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவருடைய கணவரின் பெயர் அணில்குமார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த திருமணமானது காதல் திருமணம். தற்போது சின்னத்திரையில் பரபரப்பான புகார் ஒன்று உலா வருகிறது. 

அதாவது மகாலட்சுமிக்கும் தேவதையை கண்டேன் சீரியலின் ஹீரோவான ஈஸ்வருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக, அவரின் மனைவியான சீரியல் நடிகை ஜெயஸ்ரீ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். "எங்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. எங்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தேவதையை கண்டேன் சீரியல் நடிக்கத் தொடங்கியபோது என் கணவருக்கும், நடிகை மகாலட்சுமிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் செல்போன்களில் மிகவும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவது வாடிக்கையாக கொண்டிருந்தனர். மேலும் மகாலட்சுமியின் மகனே தன்னை அப்பா என்று அழைக்குமாறு ஈஸ்வர் கூறியது, எங்கள் மகளை பெரிதும் பாதித்தது. இதனிடையே விவாகரத்து கேட்டு என்னை மோசமான முறையில் கொடுமைப்படுத்தினார்‌. என் வயிற்றிலே அவர் எட்டி உதைத்தது இன்றளவிலும் வலியை தருகிறது. இதுமட்டுமின்றி எங்களுக்கு திருமணம் ஆன பிறகுதான் அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததை அறிந்துகொண்டேன்.

அவர் லட்சக்கணக்கான பணத்தை சூதாட்டத்தில் இழந்து கடனாளியாக இருந்தனர். அப்போது நான் தான் அந்த பணத்தை திருப்பிக்கொடுத்தேன். தினமும் என்னிடம் வந்து மகாலட்சுமியுடன் வாழ விரும்புவதாக கூறி விவாகரத்து கேட்டு கொடுமைப்படுத்துகிறார்" என்று புகார் அளித்திருந்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், நடிகர் ஈஸ்வரை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் நடிகை மகாலட்சுமியை தொடர்புகொள்ள முயற்சி செய்து வருவதாகவும், இருப்பினும் அவர் தலைமறைவாகி விட்டு யாருடனும் தொடர்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஈஸ்வர் ஜாமீனில் வெளியே வந்தவுடன் தன்னுடைய மனைவியான ஜெயஸ்ரீ குறித்து பல புகார்களை அடுக்கி வைத்துள்ளார். அதாவது ஜெயஸ்ரீக்கும், மகாலட்சுமியின் கணவரான அனில்குமாருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறியுள்ளார்.

மேலும் திருப்பத்தை அதிகரிக்கும் வகையில் மகாலட்சுமியின் கணவர் அனில்குமார் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதாவது நானும் மகாலட்சுமியும் கடந்த ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எனக்கு அவருடன் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பமுள்ளது என்று கூறியுள்ளார். 

இதன் மூலம் மகாலட்சுமி தனித்து வாழ்ந்து வருவது வெளி உலகிற்கு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.இந்த சம்பவங்கள் சின்னத்திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.