தமிழ் முஸ்லீம் பெற்றோருக்கு லண்டனில் நிகழ்ந்த கொடூரம்! பெற்ற குழந்தைகளை பிரித்து பாகிஸ்தானுக்கு அனுப்பிய பிரிட்டன்!

இஸ்லாமியர் தம்பதிக்கு பிறந்த குழந்தைகளை பிரித்தானிய அரசானது அபகரித்து பாகிஸ்தானில் வளரச்செய்து வரும் சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின். இவருக்கு அதேப்பகுதியை சேர்ந்த முகமது யூசுப் என்பவரை திருமணம் செய்து வைத்தனர்.யூசுபின் வயது 50. இத்தம்பதியினருக்கு 13 வருடங்களாக குழந்தைகள் இல்லாமல் தவித்தனர்.

அல்லாஹ்வின் அருளால் இத்தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளனர். ஆனால் அவர்களுடைய வாழ்க்கையின் இருந்த காலம் அப்போது தொடங்கியது. பிரித்தானியாவில் ஒரு பீஸ்சா கடையில் யூசுப் வேலைப்பார்த்துவந்தார். ஆனால் அந்த வேலையை அரசு அவரிடமிருந்து பறித்தது. இழப்பீடாக 70 பவுண்ட்கள் அரசு அளித்து வந்தது.

ஆனால் 2 குழந்தைகள் பிறந்ததால் அந்த பணத்தை வைத்து இவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அரசிடம் இவர்கள் முறையிட்ட போது, குழந்தைகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பதாக கூறி 2 குழந்தைகளையும் 2015-ஆம் ஆண்டில் பர்மிங்காம் நீதிமன்றம் அபகரித்துக்கொண்டனர். இஸ்லாமிய குழந்தைகள் என்பதால் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய வளர்ப்பு மையத்திற்கு அழைத்து சென்றனர்.

சில நிபந்தனைகளை பின்பற்றினால் குழந்தைகளை பார்ப்பதற்கு அனுமதியளிக்கப்படும் என்று பர்மிங்காம் நீதிமன்றம் கூறியதற்கு முகமது யூசுப் ஒப்புக்கொள்ளவில்லை.4 வருடங்களாக குழந்தைகளை சந்திக்க இயலாமல் இருவரும் தவித்து வருகின்றனர்.3-வது முறையாக கர்பமாக உள்ள நிலையில் இந்த குழந்தையும் தன்னை விட்டு பிரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்.தற்போது இவர் சிங்கப்பூர் நாட்டிற்கு இடம்பெயர்ந்துள்ளார். 

எவ்வளவோ முறைகளில் முயற்சித்தும் தங்களுடைய 2 குழந்தைகளை பார்க்க முடியவில்லை. தங்கள் உறவினர்களின் மூலமாக முயற்சித்து வருகின்றனர். வாழ்வின் இறுதி வரை அவர்களை காண இயலாமல் போய்விடுமோ என்ற பயத்தில் இருவரும் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவமானது பிரித்தானிய நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.