தப்பான உறவுக்கு அழைத்த முதியவர் - வாலிபன் செய்த வெறிச்செயல் - போரூர் கொடூரம்

கடன் பிரச்சனை தொடர்பாக முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது போரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் போரூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட மதனந்தப்புரத்தில் உள்ள குறிஞ்சி தெருவில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் சுசிலா. இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் மணிமங்கலத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கரனின் மனைவி சுசீலா பல ஆண்டுகளாக மணிமங்கலத்தில் தன்னுடைய மகனுடன் வசித்து வருகிறார். 

பாஸ்கரன் மற்றும் போரூரில் தனிமையில் வசித்து வந்துள்ளார். திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் மன்சூர் முகமது. இவர் பாஸ்கரனின் வீட்டு அருகே அமைந்துள்ள உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். பாஸ்கரன் மன்சூருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். மன்சூர் தன்னுடைய குடும்ப பிரச்சனைகளை பற்றியும் பணக்கஷ்டத்தை பற்றியும் பாஸ்கரனிடம் தெரிவித்துள்ளார்.

பாஸ்கரன் மன்சூருக்கு உதவுவதாக கூறியுள்ளார். பலமுறை மன்சூர் பாஸ்கரனிடம் பணம் கேட்டபோது பணத்தை வந்தவுடன் தருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் 6 நாட்களுக்கு முன்னர் பாஸ்கர் மன்சூரை தன் வீட்டிற்கு அழைத்துள்ளார். பணம் தருவதற்காகவே அழைக்கிறார் என்று எண்ணி மன்சூர் பாஸ்கரனின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அப்போது பாஸ்கரன் மன்சூரை ஓரினச்சேர்க்கை உறவிற்கு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மன்சூர் செங்கல்லால் பாஸ்கரனின் மண்டையில் அடித்து கொலை செய்துள்ளார். பதறிய மன்சூர் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்று விட்டார். 

பாஸ்கரனின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகித்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து பார்த்தபோது பாஸ்கரனின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக பாஸ்கரனின் உடலை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். 

பாஸ்கரனின் செல்போனின் மூலம் அவர் கடைசியாக பேசிய மன்சூரை காவல்துறையினரை தொடர்புகொண்டனர். அப்போது தான் பாஸ்கரன் கொலை செய்ததை மன்சூர் ஒப்பு கொண்டுள்ளார். அவரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது போரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.