மதக்கலவரத்தால் ஊரடங்கு! ஆனாலும் இந்து பெண் பிரசவிக்க படு வேகத்தில் உதவிய முஸ்லீம் ஆட்டோ டிரைவர்!

கடந்த ஞாயிறு அன்று கலவரம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பபட்டிருந்தது, தனது பக்கத்து வீட்டு பெண் நந்திதாவிற்க்கு பிரசவ வலி அதிகமாக துடிப்பதை கண்ட மக்பூல் தனது ஆட்டோ ரிக்சாவில் உயிரையும் பனையம் வைத்து நந்திதாவை பத்திரமாக உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தார்


வீட்டில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அதி வேகத்தில் பிராதனைகளுடன் சென்றடைந்த பின்னர் சுமார் 5.30 மணியளவில் அவருக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

ஊர் முழுவதும் வகுப்பு வாதம் மற்றும் மதம் பேதம் காரணமாக கலவரங்கள் நடந்து வருகையில் மக்பூலின் இந்த மனித நேயமிக்க செயலை அறிந்த ஹைலகாண்டி துணை ஆணையாளர் கீர்த்தி ஜெலி,  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மொஹினேஷ் மிஸ்ரா ஆகியோருடன் இணைந்து, ரூபந்தாஸ் வீட்டிற்க்கு நேரில் சென்று மக்பூலின் தைரியமிக்க செயலை பாராட்டியுள்ளனர்.

மேலும் அந்த கலவரத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில்  ஒருவர்  பலியானதை அடுத்து குறைந்தது 15 பேர் காயமடைந்தனர், 15 க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும்  கடைகள் சேதமடைந்துள்ளதும் பதட்டத்தை குறைக்க நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பிற்க்காக குவிக்க்பட்டுள்ளது குறிப்பிடதக்கது