சிவனை வணங்கி தமிழ் முறைப்படி துர்காவை மனைவியாக்கிய சதாம் ஹூசைன்..! முஸ்லீம் அடிப்படைவாதிகளால் உயிருக்கு ஆபத்து?

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இஸ்லாமிய நிர்வாகி ஒருவர் இந்து முறைப்படி இன்று பெண்ணொருவரை திருமணம் செய்து கொண்டிருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளில் ஒருவர் சதாம் உசேன். இவர் கடந்த பல வருடங்களாக துர்காதேவி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தங்களுடைய காதலை பற்றி இரு வீட்டாரிடம் இருவரும் கூறியுள்ளனர். இருவீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

மேலும் இருவரும் மதத்தை மாற்றிக்கொள்ளாமல் சிவனை வணங்கி திருமணம் செய்து கொள்வது என்று புரட்சிகரமாக முடிவெடுத்துள்ளனர். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சதாம் ஹுசைன், துர்காதேவியை  சிவன் முன்னிலையில் முருகன் மீது சத்தியமாக நாம் தமிழர் கட்சி தொண்டர் என்ற அடிப்படையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவமானது இஸ்லாமிய நண்பர்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்களது மதத்தை சேர்ந்த பெண்ணையோ இல்லை இளைஞர் ஐயோ இந்து மதத்தினர் மதம் மாறி திருமணம் செய்துகொண்டால் அதற்கு சிலாகிக்கும் இஸ்லாமியர்களால் இந்த புரட்சித் திருமணத்தை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பலரும் சமூக வலைத்தளத்தில் எதிர்க்கேள்வி கேட்டு வருகின்றனர். எனினும் இந்த திருமணத்திற்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

இஸ்லாமியரான சதாம் ஹூசைன் சிவனை வணங்கி தமிழ் முறைப்படி திருமணம் செய்ததை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் எதிர்த்து வருகின்றனர்.  ஏற்கனவே கோவையை சேர்ந்த பாரூக் என்பவர் திராவிட கழகத்தில் தீவிரமாக செயல்பட்டு இஸ்லாமிய மத நம்பிக்கைகளை விமர்சித்து வந்தார். அவரை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வெட்டிக் கொலை செய்தனர். அது போன்ற நிலை சதாம் ஹூசேனுக்கு ஏற்படாமல் தடுக்க உரிய பாதுகாப்பு செய்து கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த செய்தியானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.