நீர்ச்சத்து நிறைந்த முலாம் பழத்தை சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும் !!

வெள்ளரி குடும்பத்தைச் சேர்ந்த முலாம் பழம் சாப்பிடுவதை பலரும் விரும்புவதில்லை. இந்தப் பழத்தின் மருத்துவத் தன்மையை அறிந்துகொண்டால் நிச்சயம் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள்.


• உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முலாம் பழம் சாப்பிட்டால் உடனடி நிவாரம் தெரியும். சிறுநீர் எரிச்சல், வயிற்றுப் பொருமலுக்கும் ஏற்றது. 

• முலாம் பழத்தைத் தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டுவந்தால், வயிற்றுப் புண் பூரண குணமடையும். மிகச் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படும்.

• இந்தப் பழத்தை கூழாக்கி பூசிக்கொண்டால், தோல் பிரச்னைகள் நீங்கி பளபளப்பு ஏற்படும். 

• இது சீக்கிரம் கபத்தை உருவாக்கும் என்பதால் ஆஸ்துமா, வலிப்பு நோயாளிகள் பயன்படுத்தக்கூடாது. அதேபோல் மூட்டுவலி, இடுப்பு வலி இருப்பவர்களும் பயன்படுத்தக்கூடாது.