இதயம் காக்கும் காளான் – விஷக்காளான் என்ன செய்யும் தெரியுமா ??

பூமியில் உயிர்களை வாழவைப்பதில் மழையின் பங்கு மகத்தானது. மழை தரும் அற்புத பரிசுகளில் ஒன்றுதான் காளான். இயற்கையாக வளரும் காளான்களை உலகம் முழுவதுமே மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.


நம் நாட்டில்  மொக்குக்காளான், சிப்பிக்காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே  அதிகம் விரும்பப்படுகிறது. வெளிநாடுகளில் சுமார் ஐம்பது வகையான காளான்களை உணவுக்கு பயன்படுத்துகிறார்கள்.

·         காளானில் இருக்கும் பொட்டாசிய சத்து, ரத்தத்தில்  கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது.

·         உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நாளங்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்பை காளான் தடுப்பதால் இதயம் சீராக செயல்பட முடிகிறது.

·         காளானில் புரதச்சத்து மற்றும்  அமினோ அமிலங்கள் நிரம்பியிருப்பதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

·         உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

நாட்பட்ட காளான் விஷத்தன்மையுடன் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் புதிய காளான்களை மட்டுமே தேர்வுசெய்து சாப்பிட வேண்டும். விஷக் காளான் சாப்பிட்டால் ஜீரண பிரச்னை மட்டுமின்றி உடல் அவயங்கள் பாதிக்க வாய்ப்பு உண்டு. மிகவும் விஷத்தன்மையுடைய காளான் எடுத்துக்கொண்டால் போதை, மரணம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு