நடுரோட்டில் இளம் பெண்ணை அடித்து உதைத்து தகாத செயல்! கவுன்சிலர் தம்பி அராஜகம்!

காங்கிரஸ் கட்சியின் முனிசிபாலிட்டி கவுன்சிலரின் தம்பியுடைய ஆதரவாளர்கள் ஒரு பெண்ணை அடித்து துன்புறுத்துவதாக வெளிவந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புது டெல்லியில் முக்த்ஸார் முனிசிபாலிட்டி அமைந்துள்ளது. இதன் கவுன்சிலர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இந்நிலையில் இவருடைய தம்பியும் சில ஆதரவாளர்களும் ஒரு பெண்ணை அடித்து கொடுமைப்படுத்துவதாக வெளிவந்த வீடியோ அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட பெண்ணை இவர்கள் குச்சிகளாலும், பெல்டாலும் அடித்து துன்புறுத்தியது அம்பலமாகியுள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் ராணி. மேலும் அந்த வீடியோவில் ஒரு சிறிய குழந்தை அழுது கொண்டிருப்பதும், இறுதியில் இவர்களை காப்பாற்ற வரும் வயது முதிர்ந்த தாயார் என்று கூட பாராமல் அவர்களையும் அடித்திருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

காவல்துறையினர் என்ன கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரின் தம்பியான சௌத்ரியை கைது செய்துள்ளனர். பின்னர் அவரிடம் சிறிது நேரம் விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் இவர்களிடம் 23 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

அதனை திருப்பித்தர இயலாததால் அவரை இப்படி அடித்து துன்புறுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் காவல்துறை ஆய்வாளரான மஞ்சித் சிங் அளித்த பேட்டியில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிறரை தேடி வருகின்றனர்.

அவர்களை விரைவில் பல்வேறு வழக்குகளில் 307( கொலை முயற்சி), 354( பெண்னை தனிமையில் கொடுமை படுத்தியது) கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார். இந்த சம்பவமானது முக்த்சார் முனிசிபாலிட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.