ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து மும்பையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு கிளர்ச்சியில் ஈடுபட முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
எங்களுக்கு உணவு இல்லை..! ஊரடங்கிற்கு எதிராக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாலைக்கு வந்து கிளர்ச்சி..! அதிர்ந்தது தலைநகர்!

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு வரும் 3ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த நிலையில் மும்பையில் தங்கியுள்ள வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திடீரென ஒன்று கூடினர். தங்களுக்கு ஏற்கனவே உணவு, நீர் போன்றவை கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறினர்.
ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டால் தங்களுக்கு உணவு வழங்கப்போவது யார் என்று கூறி அவர்கள் மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் முற்றுகையிட்டனர். திடீரென கூடிய தொழிலாளர்கள் ரயிலில் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனால் மும்பையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. கொரோனா அதிகம் உள்ள நகராக இருக்கும் மும்பையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திடீரென ஒன்று கூடியதால் போலீசார் அவர்களை தடியடி நடத்தி களைத்தனர். இருப்பினும் தொழிலாளர்கள் திடீரென கிளர்ந்து எழுந்துள்ளது மராட்டிய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.