சாலையில் எதிர்படும் பெண்களிடம் தகாத செயல்! 37 வயது நபருக்கு அதிர்ச்சி வைத்தியம்!

மும்பையில் இருசக்கர வாகனத்தில்செல்லும் போது எதிர்ப்படும் இளம் பெண்களிடம் எல்லாம் ஆபாச சைகைகளை காட்டும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஜுஹுவில் இருந்து கர் என்ற இடத்துக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் ஒரு நபர் தினமும் எதிர்ப்படும் இளம் பெண்கள் மற்றும் கல்லூரில் மாணவிகளிடம் எல்லாம் ஆபாச சைகைகளை காட்டுவதாக் ஜுஹு மற்றும் கர் காவல் நிலையங்களில் தொடர்ந்து பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன.

அந்த நபரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 15க்கும் மேற்பட்ட போலீசார் 300 வாகனங்களையும் 100க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. பதிவுகளையும் ஆய்வு செய்தனர். ஏனெனி அந்த நபர் தனது வாகன எண்ணை தொடர்ந்து மாற்றி வந்ததோடு அடையாளம் தெரியாமல் இருக்க எப்போதும் ஹெல்மெட் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. 

ஆய்வு, பாதிக்கப்பட்ட பெண்களிடம் அடையாளக் கேட்டறிதல் மக்களிடம் விசாரணை என 90 நாட்களை செலவிட்ட போலீசார் அதனைத் தொடர்ந்து நிதின் பரத்வாஜ் என்ற 37 வயது நபரை கைது செய்தனர். எஸ்டேட் முகவராகவும், நகை வியாபாரியாகவு செயல்பட்டு வந்த்ஹ நிதின் மீது போக்சோ  உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.