நோ பாலை கவனிக்காத அம்பயர்!! கடுப்பான கோஹ்லி! கடைசி பந்தில் பரபரப்பு!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான IPL போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டீ காக் சிறப்பாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தனர்டீ காக் 23 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 48 ரன்களை எடுத்து அவுட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் யுவராஜ் சிங் வுடன் இணைந்தார். சஹால்  வீசிய ஓவரில் யுவராஜ் சிங் ஹாட் ட்ரிக் சிக்ஸர் எடுத்து ரசிகர்ளை உற்சாகப்படுத்தினார். நான்காவது பந்தையும் சிக்ஸர் அடிக்க முயன்ற யுவராஜ் அவுட் ஆகி வெளியேறினார். சூரியகுமார் யாதவ் 38 ரன்களுக்கு  வெளியேற , பின்பு வந்த பொல்லார்ட்  மற்றும் க்ருனால் பாண்டியா சொற்ப ரன்களில் வந்த வேகத்தில் வெளியேறினர்.

கடைசியில் ஹர்டிக் பாண்டியா மட்டும் அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பாக சஹால்  சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடக்க வீரர் மொயீன்  அலி 13 ரன்களுக்கு வெளியேறினார்.பார்திவ் படேல் மற்றும் விராட் கோஹ்லி ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. எனினும் பார்திவ் படேல் 31 ரன்களுக்கு  வெளியேறினார். சிறப்பாக விளையாடிய கோஹ்லியும் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.டீவில்லியர்ஸ் மட்டும் ஒரு முனையில் அதிரடியாக விளையாடினார். அவருடன் எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. ஹெட்மயேர் மற்றும் டி  க்ராந்தோம் ஆகியோரின் விக்கெட்களை கடைசி நேரத்தில் பும்ரா வீழ்த்தி பெங்களூரு அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மலிங்கா கடைசி ஓவரை வீசினார்.முதல் பந்தில் சிவம் துபே சிக்ஸர் அடித்தார்.எனினும் அடுத்த நான்கு பந்துக்கள் டீவில்லியர்ஸ் மற்றும் சிவம் துபே இருவரும் 4 ரன்களை மட்டுமே எடுத்தனர். இதனால் கடைசி பந்தில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது.கடைசி பந்தை எதிர்கொண்ட சிவம் துபே ரன் ஏதும் எடுக்கவில்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மலிங்கா வீசிய கடைசி பந்து நோ பால் என ரி-பிலே  வில் தெரிந்தது. இதனை கவனிக்காத அம்பயரால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வியை தழுவியது. விராட் கோஹ்லி முறையிட்டபோதும் போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டதால் அதை மாற்ற முடியவில்லை. டீவில்லியர்ஸ் 70 ரன்கள் குவித்தும் பெங்களூரு அணியால் வெற்றி பெற முடியவில்லை என்பது தான் சோகம்.