தோனி இல்லாத சென்னை அணியை அடிச்சு தூக்கிய மும்பை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ipl போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. சென்னை அணியில் தோனி , ஜடேஜா,டு பிளெஸ்ஸிஸ் இடம் பெறவில்லை. இவர்களுக்கு பதிலாக முரளி விஜய் , சான்டநெர், ஷோரே ஆகியோர் அணியில் இடம் பிடித்தனர். முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 67 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்த படியாக கெவின் லெவிஸ் நிதானமாக விளையாடி 32 ரன்களை எடுத்தார்.கடைசியில் இறங்கிய ஹர்டிக் பாண்டியா 18 பந்துகளில் 23 ரன்களை எடுத்து மும்பை அணி 20 ஓவர்களில் 155 ரன்களை எடுக்க உதவினார். 

சென்னை அணியை பொறுத்தவரையில் முதல் 10 ஓவர்களில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை.  அதன் பின்பு பந்து வீச வந்த மிச்சேல் சான்டநெர் சிறப்பாக பந்து வீசி மும்பை அணியின் பேட்ஸ்மேன்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.இவர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 13 ரன்களை மட்டும் விட்டு கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்

பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். வாட்சன், ரெய்னா, ராயுடு,ஜாதவ் என அனைவரும் வந்த வேகத்தில் அவுட் ஆகி வெளியேறினர். முரளி விஜய் மட்டும் நிதானமாக விளையாடி 38 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் சென்னை அணி 17.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது . இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மலிங்கா 4 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.