ஹாட் ட்ரிக் சிக்ஸர் அடித்த யுவராஜ்! சீறிப்பாய்ந்த ஹர்டிக் பாண்டியா!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான IPL போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்துள்ளது.


டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டீ காக் சிறப்பாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தனர்டீ காக் 23 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 48 ரன்களை எடுத்து அவுட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் யுவராஜ் சிங் வுடன் இணைந்தார். சஹால்  வீசிய ஓவரில் யுவராஜ் சிங் ஹாட் ட்ரிக் சிக்ஸர் எடுத்து ரசிகர்ளை உற்சாகப்படுத்தினார். நான்காவது பந்தையும் சிக்ஸர் அடிக்க முயன்ற யுவராஜ் அவுட் ஆகி வெளியேறினார். சூரியகுமார் யாதவ் 38 ரன்களுக்கு  வெளியேற , பின்பு வந்த பொல்லார்ட்  மற்றும் க்ருனால் பாண்டியா சொற்ப ரன்களில் வந்த வேகத்தில் வெளியேறினர்.

கடைசியில் ஹர்டிக் பாண்டியா மட்டும் அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பாக சஹால்  சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.