கை விரல் மையை எளிதாக அழிக்கும் நெயில் பாலிஸ் ரிமூவர்! மும்பை தேர்தலில் பரபரப்பு!

தேர்தல் ஆணையத்தால் விரலில் வைக்கப்படும் மையை நெயில் பாலிஸ் ரிமூவர் மூலம் உடனடியாக அழிக்க முடிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


நான்காம் கட்ட தேர்தல் நடைபெறும் மும்பையில் இன்று வாக்களித்துவிட்டு அனைவரும் உற்சாகமாக போஸ் கொடுத்தனர். சிலர் தங்கள் கை விரலில் வைத்த மையை நெயில் பாலிஸ் ரிமூவரால் அழித்த போது அது அழிந்துள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா தனது விரலில் மை அடையாளத்துடன் உள்ள போட்டோவையும் பின்னர் மை அழிக்கப்பட்ட போட்டோவையும் வெளியிடுள்ளார். அதேபோன்று நொய்டாவைச் சேர்ந்த பத்திரிகையாளரான ரித்துகபூரும் விரலில் மை அழிக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நெயில்பாலிஸ் ரிமூவர்கள் மூலம் எளிதாக வாக்களித்த மையை அழிக்க முடிவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதன் மூலம் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்று புகார் எழுந்துள்ளது.