மதிப்பெண்களுக்காக பேராசிரியர்களிடம் கற்பை இழக்கும் காலேஜ் மாணவிகள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

மும்பையில் உள்ள காலேஜ்களில், பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக, அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த ஆண்டில் மட்டும் அங்குள்ள காலேஜ்களில், நடைபெற்ற பாலியல் குற்றங்கள் தொடர்பாக, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், பல வழக்குகள், காலேஜ் பேராசிரியர்கள், நிர்வாகிகள் மீது மாணவிகள் தெரிவித்தவை ஆகும்.

ஆனால், இதுபற்றி உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என்று மாணவ, மாணவியர் வேதனை தெரிவிக்கின்றனர். மாணவ, மாணவியரை பாதுகாக்க வேண்டிய காலேஜ் நிர்வாகிகளே, பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்க, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பெரும்பாலும் மதிப்பெண்களை காரணம் காட்டியே மாணவிகள் பாலியல் பலாத்காரங்களுக்கு ஆளாகின்றனர்

மதிப்பெண்களை குறைத்துவிடுவதாக பேராசிரியர்கள் மிரட்டும் சமயத்தில் பெண்களும் வேறு வழியில்லாமல் பேராசிரியர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்கின்றனர். இதனை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

காவல் நிலையங்களில் இந்த விவகாரங்கள் புகார் ஆகும் போதும் பெரும்பாலும் பெயில் ஆக்கிவிடுவதாக கூறியும், பிராக்டிகல் மதிப்பெண் வழங்கமாட்டேன் என்று கூறியும் பலாத்காரம் செய்ததாகவே மாணவிகள் புகார் அளித்து வருகின்றனர்