6 பாடங்களிலும் ஜஸ்ட் பாஸ் 35 மதிப்பெண்கள்! ஆசிரியர்களை மிரள வைத்த 10ம் வகுப்பு மாணவன்!

மும்பையில் ஒரு மாணவன் 10-ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெறத்தேவையான குறைந்த பட்ச மதிப்பெண்ணான 35 மதிப்பெண்களை அனைத்துப் பாடங்களிலும் ஒரே சீராக பெற்றிருப்பது டாக் ஆஃப் தி டவுன் ஆக உள்ளது.


தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்று புகழ் பெறுவது ஒரு வகை என்றால். குறைந்த பட்ச மதிப்பெண்களைப் பெற்றும் பெயர் பெறமுடியும் என காட்டியிருக்கிறார் ஒரு மாணவர். அண்மையில் மகாராஷ்டிர மாநிலதில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் மிரா சாலையில் உள்ள சாந்தி நகர் உயர்நிலைப் பள்ளியில் படித்து 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவன் அக்‌ஷித் ஜாதவுக்கு தேர்வில் தனக்கு கிடைத்த மதிப்பெண்களை நம்பமுடியவில்லை. அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறத் தேவையான 35 மதிப்பெண்கள் சீராகக் கிடைத்திருந்தன.

அக்‌ஷித் தேர்வில் 55 மதிப்பெண்களை எதிர்பார்த்ததாக அவரது தந்தை தெரிவித்தார். எனினும் அனைத்து பாடங்களிலும் 35 மதிப்பெண்கள் எடுத்ததன் மூலம் அவர் தேர்வில் வெற்றிபெற்றது குறித்து  தாங்கள் ஆறுதல் அடைவதாக அவர் கூறினார்.