பஞ்சாப் அணியை புரட்டி போட்ட கேப்டன் பொல்லார்ட்! கலக்கத்தில் ரோஹித்!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


முதலில் விளையாடிய கிங்ஸ் XI பஞ்சாப் அணி 20 ஓவர்களுக்கு 197 ரன்களை குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். கிறிஸ் கெய்ல் சிறப்பாக விளையாடி 63 ரன்களை எடுத்தார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை எடுத்தது.

 பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் சுமாராக விளையாடினாலும் அந்த அணியின் கேப்டன் பொல்லார்ட் களமிறங்கியதும் எதிரணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். பொல்லார்ட் அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 83 ரன்களை குவித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவினார். கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைமையில் பொல்லார்ட் முதல் இரண்டு பந்துகளில் 10 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 

கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மும்பை அணியின் அல்ஜரி ஜோசப் இரண்டு ரன்களை எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு உதவினார். சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த பொல்லார்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் ரோஹித் சர்மா விளையாடாததால் கேப்டனாக பொல்லார்ட் நியமிக்கப்பட்டார். முதல் போட்டியிலே கேப்டனாக அசத்தி அதிரடியில் கலக்கி மும்பை அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார் பொல்லார்ட். இது ரோஹித் சர்மா விற்கு நெருக்கடியை கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.