6 வது முதல் 9 வயது வரையுள்ள சிறுமிகள் தான் குறி! பள்ளி தலைவரின் விபரீத புத்தி! அடுத்தடுத்து அரங்கேறிய விபரீதம்!

அரசு தொடக்கப் பள்ளி தலைவர் மீது அடுத்தடுத்து குவியும் பாலியல் புகார்களால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


மும்பையின் அருகே உள்ள கர்ஜத் நகரில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளியின் தலைவராக நாராயண் பாட்டில் (42 வயது) உள்ளார். இவர் மீதுதான் இப்படி அடுக்கடுக்காகப் புகார் வெடித்துள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் 6 வயது முதல் 9 வயதுள்ள மாணவிகள் பலரும் தங்களிடம் முறைகேடாக, நடந்துகொண்டதாகக் கூறி, புகார் கூறுகின்றனர்.

ஏற்கனவே ,இதுதொடர்பாக, 2ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை இவ்வாறு பாலியல் துன்புறுத்தல் செய்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மேலும் 5 மாணவிகள், அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி, குழந்தைகள் நல வாரிய அதிகாரிகளும், போலீசாரும் குறிப்பிட்ட பள்ளியில் நேரடியாகச் சென்று, மாணவ, மாணவியரிடம் விசாரணை நடத்தி, குற்றத்தை உறுதிசெய்துள்ளனர். நாராயண் பாட்டிலுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.