கண் பார்வை பிரகாசமடைய மற்றும் பல உடல் உறுப்புகளுக்கும் பயனளிக்கும் முளைக்கீரை

பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படும் முளைக்கீரையில். சுண்ணாம்பு சத்து ,மெக்னீசியம் ,இரும்பு ,தாமிரம் ,பொட்டாசியம் ,வைட்டமின் சி போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.



·         வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வையை தெளிவாக்கும். அத்துடன் மெலிந்த தேகத்தை புஷ்டியாக்கும் தன்மை கொண்டது.

·         மலச்சிக்கலையும் மூல நோயையும்  போக்கும். அஜீரணக் கோளாறுகளை நீக்கி பசியை அதிகப்படுத்தும்.

·         உடல் சூட்டைத் தணிக்கும்.  கண் எரிச்சலைப் போக்கும் தன்மையும்  நரம்புகளுக்கு வலுவூட்டும் சக்தியும் உண்டு.

·         இருமல், தொண்டைப்புண்ணுக்கு மருந்தாக இருப்பதுடன் சருமத்துக்குப் பொலிவு கொடுக்கிறது.