பரபரப்பாக நடந்துவரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் , பைனலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது.
நான் வெளியேறுகிறேன்! புது விஷயம் காத்திருக்கிறது! கன்பெசன் ரூமில் முகேன் போட்டு உடைத்த உண்மை!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் இன்று மாலை நடைபெறுவதால் , பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என்று இன்று மாலை தெரிந்துவிடும். இந்நிலையில் நேற்றைய பிக் பாஸ் எபிசோடில் இறுதிப் போட்டிக்கு முதலில் தகுதி பெற்ற முகேன் கன்பெஷன் அறையில் அமர்ந்து பிக்பாஸிடம் பேசியுள்ளார் .
அதில் பிக்பாஸ் வீடு எனக்கு கற்றுக்கொடுத்த பாடத்துடன் நான் வெளியே செல்ல இருக்கிறேன் . இங்கே முடிந்தாலும் வெளியில் புதிதாக ஒரு விஷயம் ஆரம்பமாக இருக்கிறது எனவும் அவர் கூறியிருந்தார். இவரது பேச்சு அபிராமி முகேன் மீது வைத்திருந்த காதலை நினைவுபடுத்துகிறதோ என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் .
முதலில் நெருக்கமாக பழகி வந்த முகேன் அபிராமி ஒரு கட்டத்தில் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டாலும் , பிக்பாஸ் வீட்டைவிட்டு அபிராமி வெளியே சென்றபோதும், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தபோதும் முகேனிடம் நன்றாகவே பழகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
இதனிடையே கன்பெசன் ரூமில் வைத்து பேசுவதை பார்த்த போது முகேன் இந்த சீசன் வின்னர் இல்லை என்பது போல் தெரிகிறது.