சினிமாவில் கதாநாயகி அவதாரம்..! முன்னாள் முதல்வரின் 2வது மனைவி நடிக்கும் திரைப்படம்!

தமயந்தி என்னும் கன்னட திரைப்படம் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.


இந்த புகைப்படத்தை தயாரிப்பாளர் நவரசன் தயாரித்திருக்கிறார் . மேலும் இந்த திரைப்படமானது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகை ராதிகா குமாரசுவாமி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் நவரசன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றிருந்தார். 

அப்போது பேசிய அவர் , வரலாற்றை மையமாக வைத்து எடுக்கும் இந்த திரைப்படம் மக்களிடையே பெரிதும் வரவேற்கப்படும் எனவும் எதிர்பார்க்கிறோம் . மேலும் இந்த மாதிரியான திரைப்படங்களுக்கு சமீப காலமாகவே ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்றும் மேலும் அவர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக நாங்கள் உருவாக்கி இருக்கிறோம் என்றும் கூறினார்.

இந்த திரைப்படத்திற்கான வி எஃப் கே பணியினை மேற்கொள்வதற்காக நாங்கள் சில காலம் காத்து இருந்தோம் . தற்போது இந்த திரைப்படமானது வெளியிடுவதற்காக ஆயத்தமாக பட்டுள்ளது. இந்த திரைப்படமானது வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என தயாரிப்பாளர் நவரசன் கூறியிருந்தார்.

இந்த திரைப்படத்தில் அனுஷா , ஜி.கே.ரெட்டி போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூர், கேரளா , மைசூர் போன்ற பல இடங்களில் நடத்தப்பட்டது. 

இந்த திரைப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ளார் இந்த படத்திற்கான ஆண் கதாபாத்திரத்தில் நடிகர்அரவிந்த் நடித்துள்ளார். நடிகர் அரவிந்த் மற்றும் நடிகை ராதிகா குமாரசுவாமி ஆகிய இருவருமே தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில்குறிப்பிடப்படவேண்டிய அம்சம் என்ன என்றால் ராதிகா கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் 2வது மனைவி ஆவார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திய அவர் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு களம் இறங்கியுள்ளார்.