எதிரியை பயமுறுத்துவதற்காக இளைஞர்கள் கூட்டாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவமானது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகைக்கு வயது ஒன்று..! சிந்திய ரத்தம் வீண் போகாது..! பழிக்குப் பழி உறுதி..! மதுரையை மிரட்டும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!
மதுரை மாவட்டத்தில் அனுப்பானடி எனும் இடம் அமைந்துள்ளது. மதுரையில் உள்ள காமராஜர் கல்லூரியில் பிரவீன்குமார் என்பவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் தேதியன்று பிரவீன்குமார் வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளார்.
அப்போது இவருக்கும் மர்ம கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மர்ம கும்பல் பிரவீன் குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்நிலையில் அவருடைய முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் அவருடைய நண்பர்கள் நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டி துக்கத்தை அனுசரித்துள்ளனர்.
பிரவீன் குமாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் அவருடைய நண்பர்கள் மரியாதையைச் செலுத்தினர். ஆனால் அந்த நினைவஞ்சலி போஸ்டரில், "சிந்திய ரத்தம் வீண் போகாது, எதிரியை வீழ்த்துவது உறுதி, பகைக்கு வயது ஒன்று, இரத்தம் சரிந்த நாள், பலிக்குப்பலி தொடரும்" என்று பகைவர்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடுத்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்ய போவது இவ்வளவு துணிச்சலாக போஸ்டர் ஒட்டி அறிவித்திருக்கும் மர்ம கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.