ஒரே ஒரு போன்..! 14 லிட்டர் தாய்ப்பால்..! 100 குழந்தைகளை காப்பாற்றிய இளம்பெண்கள்! சென்னை நெகிழ்ச்சி!

தாய்ப்பால் கிடைக்காமல் தவித்த 100 குழந்தைகளின் உடல்நலத்தை அதிகரிக்கும் வகையில், 14 லிட்டர் தாய்ப்பால் தானமாக தரப்பட்டுள்ள செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 2 வாரங்களுக்கு முன்னர் 100 குழந்தைகள் பிறந்தனர். இவர்களுக்கு தரவேண்டிய தாய்ப்பாலுக்கு தடை ஏற்பட்டது. இதனால் தாய்பால் சேமிப்பு வங்கிக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இருப்பினும் அங்கும் தட்டுப்பாடு இருந்தது. இந்நிலையில் தன்னார்வலர்கள் குழு ஒன்று 14 வீட்டில் தாய்ப்பாலை மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் கொண்டு வந்து கொடுத்தனர்.

அவர்களை தொடர்புகொண்டு அணுகிய போது, அவர்களுக்கு உதவிய தாய்மார்கள் ஒருவரான பிரீத்தி என்பவரின் அறிமுகத்தை கொடுத்தனர். அப்போது பிரீத்தி, தான் தாய்ப்பாலை தானம் செய்ய முடிவெடுத்த கதையை கூறினார். அதாவது பிரீத்தி தற்போது 2-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

சென்ற ஆண்டு பிரசவம் ஆவதற்கு முன்பே தன்னுடைய ஜோடியின் மூலம் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக செயல்படும் தாய்ப்பால் தான் அளிக்கும் பெண்களுடன் தன்னை இணைத்து கொண்டார். புதிதாக பிறக்கும் குழந்தைகள் தாய்ப்பாலுக்கு தவிப்பதாக வெளியான செய்தியை படித்ததும் மிகவும் மன வேதனை அடைந்துள்ளார். 

மேலும் தன்னுடைய குழந்தைக்கும் தான் இல்லை என்றால் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும் என்பதையும் உணர்ந்த அவர் இந்த தாய்பால் தானத்தில் காலெடுத்துவைத்ததாக கூறினார். இவர் தற்போது மந்தைவெளியில் வசித்து வருகிறார். தன்னுடைய குழந்தைக்கு மட்டுமின்றி தாய்ப்பால் தானமும் செய்துவருகிறார்.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.