வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய ஆறு! 4 குழந்தைகளை தள்ளிவிட்ட இரக்கமற்ற தாய்! பிறகு அரங்கேறிய திடுக் சம்பவம்!

தாய் ஆற்றில் குதிப்பதை கண்ட 3 குழந்தைகள் ஆற்றில் குதித்து வெள்ளத்தில் அடித்து சென்று உயிரிழந்த சம்பவமானது பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பீகார் மாநிலத்தில் ஷிட்டால்பட்டி என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ராணி தேவி என்ற பெண் வசித்து வந்தார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். ராணி தேவி தன் 4 குழந்தைகளுடன் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது ஒரு குழந்தை தவறி ஆற்றில் விழுந்ததாகவும் விழுந்த குழந்தையை காப்பாற்ற ராணி தேவி ஆற்றில் குதித்தாகவும் இதனைக் கண்ட மற்ற மூன்று குழந்தைகளும் ஆற்றில் குதித்ததாகவும் கூறப்ப்டடது.  இந்த சம்பவத்தை கண்ட அருகிலிருந்த பொதுமக்கள் 5 பேரையும் காப்பாற்ற ஆற்றில் குளித்துள்ளனர். 

ஆனால் அவர்களால் ராணி தேவி மற்றும் 1 குழந்தை மட்டுமே காப்பாற்ற முடிந்தது என்றும் மற்ற 3 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். என்றும் தகவல் பரவியது. அவர்களுள் ஒரு ஆண் குழந்தையின் உடல் மட்டும் கரையை அடைந்தது. அந்தக் குழந்தையின் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அந்தக் குழந்தைக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது ஷிட்டால்பூர் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ராணி தனது குழந்தைகள் நான்கு பேரையும் ஆற்றில் தள்ளி கொலை செய்ததாகவும் பிறகு தானும் குதித்து தற்கொலைக்கு முயன்ற போது பொதுமக்கள் காப்பாற்றிவிட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

ஊடகங்களில் கூறப்படுவது போல் குழந்தை வெள்ளத்தில் பலியாகவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தாயை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.