தண்டவாளம் நடுவே 3 சடலங்கள்! அருகே அமர்ந்து கதறிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை! கொட்டும் மழையில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

35 வயது பெண்ணொருவர் தன் குழந்தைகளுடன் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிகார் மாநிலத்தில் பாட்னா மற்றும் கயா ஆகிய இடங்கள் அமைந்துள்ளன. இவற்றை இணைப்பதற்காக அதிவேக ரயிலொன்று இயங்கி வருகிறது. நேற்று மதியம் ரயில் தண்டவாளத்தில் 3 வயது மதிக்கத்தக்க குழந்தையொன்று மழையில் அழுது கொண்டிருந்தது.

குழந்தை நெடுநேரமாக அழுது கொண்டிருந்ததால் சத்தம் கேட்ட பொதுமக்கள் தண்டவாளத்திற்கு சென்றனர். அப்போது குழந்தையின் தாய் மற்றும் 2 ஆண் குழந்தைகள் இறந்து சடலமாக கிடந்தனர். 

பொதுமக்கள் உடனடியாக அப்பகுதி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தாய் மற்றும் 3 குழந்தைகளும் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்று இருப்பதை கண்டுபிடித்தனர். அதில் ஒரு குழந்தை மட்டும் பிழைத்து அழுது கொண்டிருந்தது. 

அவர்களுடைய உடை கிழிந்து இருந்ததால், வறுமையினால் அவர்கள் தற்கொலைக்கு முடிவு செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

இருப்பினும் காவல்துறையினரால் அவர்களின் அடையாளத்தை எளிதில் கண்டறிய இயலவில்லை. இந்த சம்பவமானது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.