பிறந்து மூன்றே நாள் தான்..! முட்புதறுக்குள் இருந்து கதறிய பச்சிளம் ஆண் குழந்தை..! நெஞ்சை உலுக்கிய ஈரோடு சம்பவம்!

பிறந்து 3 நாட்களேயான கைக்குழந்தை முட்புதரில் வீசப்பட்ட இந்த சம்பவமானது கோபியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட நல்லகவுண்டம்பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் பிரசாந்த். பிரசாந்தின் வயது 24. இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கோபி நாகர்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டவுடன் பிரசாந்த் அருகே இருந்த முட்புதரை நோக்கி சென்றுள்ளார்.

அந்த முட்புதரில் துணியால் கவரப்பட்டு பச்சிளம் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அப்பகுதி 108-க்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் குழந்தையை மீட்டெடுத்து கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் மருத்துவமனையில் இயங்கிவரும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் குழந்தையை அனுமதித்து பராமரித்து வந்தனர். 

இதனிடையே இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையை வந்து பார்வையிட்ட காவல்துறையினர், குழந்தையை வீசி சென்ற தாய் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவமானது கோபியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.