3வது கணவனுக்கு பிறந்த முதல் குழந்தை! பணத்திற்காக தாய் செய்த பதைபதைக்க வைக்கும் செயல்!

பெற்றெடுத்த குழந்தையை 1 லட்சம் ரூபாய்க்கு இடைத்தரகர் மூலம் தாயார் விற்ற சம்பவமானது வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி என்னும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட இந்திராநகர் எனுமிடத்தில் சத்யா என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடைபெற்றுள்ளது. 2 கணவர்களையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தொடர்பானது நாளடைவில் நெருக்கமாக மாறியது. இருவரும் சேர்ந்து வாழ தொடங்கினர். இவ்விருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்து ஒரு வருடம் முடியும்போது, முருகன் காசநோயால் கடுமையாக அவதிப்பட்டு வந்தார். அவர் தன்னுடைய சிகிச்சைக்காக தர்மபுரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். 1 மாத காலத்திற்கு சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று அவர் வீடு திரும்பிய போது குழந்தையை தேடியுள்ளார். 

வீடு முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் தன் மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு ராதா ஏதேதோ மழுப்பலாக பதில் கூறியது முருகனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

உடனடியாக அவர் வாணியம்பாடி காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சத்யாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் தீவிரத்தை தாங்க இயலாமல் சத்யா உண்மையை கூற தொடங்கினார். 

அதாவது பெங்களூருவிலுள்ள ஜெய் கார்டன் பகுதியை சேர்ந்த ரஹமத்-ஷகிலா தம்பதியினரிடம் குழந்தையை விற்றதை ஒப்புக்கொண்டுள்ளார். 1 லட்ச ரூபாய்காக குழந்தை விற்றதாக சத்யா காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

65 ஆயிரம் ரூபாயை முன்பணமாக பெற்றதாகவும் கூறியுள்ளார். இவற்றை தன்னுடைய பெரியம்மாவான கீதா என்பவரின் ஆலோசனைப்படி செய்ததாக கூறியுள்ளார். கவிதா என்ற இடைத்தரகர் மூலம் குழந்தையை விற்றதாக கூறினார்.

பெங்களூரு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தைகயை மீட்டெடுத்தனர். பின்னர், குழந்தையின் தாயான சத்யா, சத்யாவின் பெரியம்மா கீதா மற்றும் இடைத்தரகர் கவிதா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவமானது வானியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.