வேகமாக பரவும் கொரோனா..! கணவன், 2 குழந்தைகளை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு பறந்த பெண் டாக்டர்..! காரணம் என்ன தெரியுமா?

கொரோனா மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக  பெண் மருத்துவர் பிறந்த 4 மாதங்களேயான கை குழந்தையை விட்டுவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தாலும், இந்தியா ரஷ்யா போன்ற நாடுகளில் தற்போது தான் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. ரஷ்யாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் கேரளாவிலிருந்து மருத்துவ உதவிகளை செய்வதற்காக 105 மருத்துவர்கள் விமானத்தின் மூலம் இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றடைந்துள்ளனர். கேரளா மாநிலத்திலுள்ள ஆலப்புழா என்று பகுதியிலிருந்து ரீனு ஆகஸ்டின் என்ற பெண் மருத்துவரும் சென்றுள்ளார்.

பெண் மருத்துவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 2-வது குழந்தை பிறந்து 4 மாதங்களேயான நிலையில் அவர் தற்போது சேவை புரிய சென்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "என் குழந்தைகளை கணவரிடமும் பெற்றோரிடமும் விட்டு செல்வது என்பது என் இதயத்தை சுக்குநூறாக உடைக்கிறது.

இருப்பினும் நான் சேவை புரிய வேண்டிய காலம் இது. இந்த தியாகத்தை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். என்னுடைய குடும்பத்தினருக்கு நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டு விடுவேன் என்ற அச்சம் அதிகமாக உள்ளது. ஆனால் மருத்துவமனைகளில் எடுக்கப்பட்டுள்ள முறையான சுகாதார முறைகளை அவர்களிடம் எடுத்துரைத்த பிறகு சற்று மணம் தளர்ந்தனர்.

தங்களுடைய நலனை முதன்மை மருத்துவர்கள் பெரிதெனக் கருதி இருந்தால் இந்த நோய் பாதி உலகத்தை நேரத்திற்கு அழித்திருக்கும். இந்த நோயை தடுக்கும் போராட்டத்தில் நாங்கள் செய்யும் சேவையானது மிகவும் இன்றியமையாததாகும். இந்த நோய் இல்லாத உலகத்தை பல்வேறு மருத்துவர்கள் கனவு கண்டு வருகின்றனர். இந்த கனவு நனவாகும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை" என்று கூறியுள்ளார்