ஹாஸ்பிடல் போய்ட்டு வர்றேன்! புறப்பட்டுச் சென்ற 3 குழந்தைகளின் தாய்! பிறகு செல்போன் ஸ்விட்ச் ஆஃப்! கதறும் கணவன்!

3 குழந்தைகளின் தாய் திடீரென்று மாயமான சம்பவமானது ராயக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை என்னும் இடம் அமைந்துள்ளது. இதற்கருகே கருக்கண்அள்ளி என்னுமிடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட பழையூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவருடைய மனைவியின் பெயர் லக்ஷ்மி. லட்சுமியின் வயது 29. இத்தம்பதியினருக்கு மதுமிதா, லலிதா என்று 2 மகள்களும், மோகன் என்ற மகனும் உள்ளனர்.

நேற்று காலை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக லக்ஷ்மி கூறிவிட்டு சென்றுள்ளார். மதியம் 3 மணி அளவில் கோபால் லட்சுமியை தொடர்பு கொண்டபோது ராயக்கோட்டை பேருந்தில் வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் நெடுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் கோபால் பதற்றமடைந்தார். உடனடியாக மீண்டும் கால் செய்தார். ஆனால் அப்போது அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் பதறிப்போன கோபால் தன்னுடைய உறவினர்களுடன் சேர்ந்து லட்சுமியை தேட தொடங்கினர். அதே சமயத்தில் அப்பகுதி காவல்நிலையத்திலும் புகாரளித்தனர். 

புகாரை பதிவு செய்த காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது ராயக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.