ஆண் குழந்தைக்கு கோவிட்..! பெண் குழந்தைக்கு கொரோனா..! இரட்டை குழந்தைகளுக்கு பெத்தவங்க வச்ச பெயர்கள்..! எங்கு தெரியுமா?

புதிதாக பிறந்த இரட்டையர்களுக்கு "கொரோனா" மற்றும் "கோவிட்" என்று பெற்றோர் பெயரிட்ட தகவலானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது‌.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 10,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதிலும் 2300 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 157 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 57 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதனிடையே சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அவர்களுக்கு பெற்றோர் கொரோனா மற்றும் கோவிட் என்று பெயரிட்டதாக தகவல்கள் வெளியாகின. சில காரணங்களுக்காக குழந்தைகளுக்கு மீண்டும் பெயர் சூட்டப்போவதாக பெற்றோர் அறிவித்துள்ளனர்.

அதாவது இவ்விரு பெயர்களும் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதால் மக்களிடம் குழந்தைகளுக்கு தவறான அபிப்ராயம் ஏற்படும் என்பதால் பெற்றோர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே ராய்ப்பூரில் ஒரே பிரசவத்தில் இரட்டையர்களை பெற்றெடுத்த தாயார், ஆண் குழந்தைக்கு கோவிட் என்றும், பெண் குழந்தைக்கு கொரோனா என்றும் பெயர் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மார்ச் 27ஆம் தேதியன்று எனக்கு பிரசவம் ஏற்பட்டது. மிகுந்த சிரமத்திற்கு பிறகு நான் இருவரையும் பெற்றெடுத்தேன். அதனை எப்போதும் மறந்து விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு பெயர்சூட்டி உள்ளேன்" என்று கூறியுள்ளார்.

இந்த தகவலானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..