3 வயதில் பிரிந்த தாயை 60 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்த மகள்! பிரிட்டன் பாசப்போராட்டம்

3 வயதில் தன்னை விட்டு பிரிந்து சென்ற தாயை வாழ்நாள் முழுவதும் மகள் தேடி உள்ள சம்பவமானது பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டில் காணாமல்போன உறவினர்களை சேர்த்து வைப்பதற்காக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியானது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் 60 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த குடும்பத்தினர் சேர்ந்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெரில் என்பவர் கலந்துகொண்டார். இவருடைய தாயின் பெயர் மரியம் ஸ்டோக்ஸ். 60 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை விட்டு பிரிந்து சென்ற தாயை இந்நாள் வரை தேடி அலைந்து கொண்டிருப்பதாக கூறினார். 

பெரிலுக்கு 3 வயது இருந்தபோது மரியம் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அப்போதிலிருந்து பெரில் தன்னுடைய தந்தை மற்றும் அத்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். 

தன்னுடைய தந்தையிடம் தாயைப் பற்றி கேட்டதற்கு, மரியம் ஒரு ராணுவ வீரருடன் ஓடிவிட்டதாக கூறியுள்ளார். இதனை நம்பாத பெரில் தன்னுடைய தாயை தேடி தன் தாத்தாவிடம் சென்றுள்ளார். துரதிஷ்டவசமாக அவருடைய தாத்தா ஏற்கனவே இறந்துவிட்டார்.

மேலும் தன்னுடைய தூரத்து உறவினர்களிடம் விசாரிக்க முயன்றார். அவ்வாறு விசாரித்தபோது 2003-ஆம் ஆண்டில் மரியம் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும், இவருக்கு யோவான் என்ற தங்கை இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக பெரில் தன்னுடைய தங்கையான யோவானை சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது டேவிட் மட்டும் ரிச்சர்ட் ஆகிய இரு சகோதரர்கள் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றார். 

60 வருடங்களுக்கு முன்னர் பிரிந்த குடும்பம் தற்போது இணைந்துள்ளது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.