அம்மாவும்... இந்த மாமாவும்..! வீடியோ காலில் மகன் கூறிய பகீர் தகவல்..! பிறகு அரங்கேறிய மனதை உலுக்கும் சம்பவம்!

நெல்லை மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மகனை கள்ளக் காதலரை கொண்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அருகே உள்ள டாணா பகுதி அமைந்துள்ளது. இங்கு அந்தோணி பிரகாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு பொள்ளாச்சியை சேர்ந்த தீபா என்ற பெண்ணை வீட்டு பெரியவர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். அந்தோணி லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் . 

ஆகையால் இவர் மாதத்தில் பல நாட்கள் வெளியே ஊரிலேயே தங்கி பணி புரிவதை தன் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 4 வயதில் லோகேஷ் என்ற மகன் உள்ளார். கணவர் வீட்டில் இல்லாததை பயன்படுத்திக்கொண்ட தீபா, சொரிமுத்து என்பவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

தீபா தன் வீட்டின் அருகில் இருந்த வங்கியில் சுய வேலை செய்வதற்காக கடன் பெற்று இருக்கிறார் . இந்த கடனை வசூலிப்பதற்காக சொரிமுத்து அவ்வப்பொழுது தீபாவின் வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார் . இவர்களுடைய பழக்கம் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.

இதைப்பற்றி அக்கம்பக்கத்தினர்தீபாவின் கணவரான அந்தோணி இடம் கூறும் போது அவர் இதனை நம்ப மறுத்து விட்டார். ஒருநாள் அந்தோணியை தன் மனைவி தீபாவிடம் வீடியோ காலில் பேசுவதற்காக போன் செய்திருக்கிறார். அப்போது அந்த பூனை அவர்களது 4 வயது மகன் லோகேஷ் எடுத்து பேசி இருக்கிறார்.

லோகேஷ் தன் தந்தையிடம் வீடியோ காலில் பேசுவதை அறியாத தீபா சொரிமுத்து உடன் நெருங்கி பழகி இருந்திருக்கிறார். இதனை பார்த்த அந்தோணி மிகவும் ஆத்திரம் அடைந்து தன் மனைவியை கண்டித்திருக்கிறார். இருப்பினும் தீபா இந்த செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார்.

பின்னர் ஒருநாள் தீபாவும் சொரிமுத்து உன் நினைவுகள் லோகேஷை விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்ற பொழுது அவரது தந்தை அந்தோணி வீடியோ கால் செய்து இருக்கிறார். தன் மகனிடம் விசாரித்த போது தான் ஒரு விடுதியில் இருப்பதாகவும் தன்னுடன் ஒரு மாமா இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

உடனே தன் மகன் லோகேஷ் அருகில் சொரிமுத்து இருப்பதை பார்த்த அந்தோணி மிகவும் கோபமடைந்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சொரிமுத்து இந்த சிறுவன் என்று பார்க்காமல் லோகேஷை கண்டபடி அடித்திருக்கிறார்.

இது தாக்குதலில் லோகேஷ் மயங்கி விழுந்திருக்கிறார். சொரிமுத்து கண்மூடித்தனமாக அடித்ததில் லோகேஷ் சுயநினைவின்றி கிடந்துள்ளார். உடனே தீபாவும் சொரிமுத்து உன் நினைவு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது சிறுவன் லோகேஷ் உடைய தந்தை தான்தான் என்று சொரிமுத்து கையெழுத்திட்டு இருக்கிறார். இதனையடுத்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

தகவலறிந்து வந்த அந்தோணிராஜ் அரசு மருத்துவமனைக்கு வந்து தன்னுடைய மகனின் சடலத்தை கேட்டிருக்கிறார் உடனே அங்கிருந்தவர்கள் சொரிமுத்து தான் லோகேஷின் தந்தை என்று கூறியுள்ளனர் இதனால் அங்கு சற்று நேரம் குழப்பம் நீடித்துள்ளது. 

கடைசியில் அந்தோணி தான் அந்த சிறுவனின் தந்தை என தெரிந்ததும் அவரிடம் சிறுவனின் உடல் அளிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட்டது தகவலறிந்து வந்த போலீசார் சொரிமுத்துவையும் தீபாவின் கைது செய்ய வந்துள்ளனர்.

இதனை பற்றி தகவல் அறிந்த சொரிமுத்து அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் போலீசார் தீபாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் தன்னுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை கொலை செய்வதற்காகத் தான் விடுதிக்கு அழைத்து சென்றதாக திடுக்கிடும் தகவலை வாக்குமூலமாக அளித்தார்.

கள்ளக்காதலுக்காக பெற்ற தாயே தன் குழந்தையை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.