மகனை கொலை செய்துவிட்டு கள்ளக் காதலனை மருமகன் ஆக்கிய கொடூர தாய்! கன்னியாகுமரி பகீர் சம்பவம்!

கள்ளக்காதலனுடன் தகாத உறவில் இருந்த தாயைப் பார்த்த பெற்ற மகனை கொலை செய்த தாயை போலீசார் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்துள்ளனர்.


களியக்காவிளை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா. 49 வயதாகும் இவர் தனது கணவன் மோகன் என்பவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர். இவரது மகன் 13 வயதான லால் மோகன் கடந்த 2016ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். தூக்க மாத்திரை சாப்பிட்டு தனது மகன் தற்கொலை செய்து கொண்டான் என்று அவரது அம்மா வசந்தா போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

இதன் மூலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வசந்தாவின் கணவர் மோகன் தனது மகள் மரணத்தில் மர்மம் உள்ளது என்று போலீசில் கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் பிரேத பரிசோதனையில் கழுத்தில் காயம் மற்றும் தூக்க மாத்திரை தொண்டையில் சிக்கி இருந்ததும் தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் இறந்து போன சிறுவனின் தாய் வசந்தா விடம் குறுக்கு விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணையில் வசந்தா தனக்கும் சுபன் என்ற நபருக்கும் கள்ள காதல் இருந்து வந்தது. இதையறிந்த எனது கணவர் என்னை பிரிந்து சென்று விட்டார். அதனால் எந்த பிரச்சனையுமில்லாமல் நானும் சுபனும் கள்ள உறவில் இருந்து வந்தோம். 

கடந்த 2016ம் ஆண்டு நானும் சுமனும் உல்லாசமாக இருந்தபோது எனது மகன் அதை பார்த்து விட்டான். விஷயம் வெளியே தெரிந்தால் பிரச்சனையாகி விடும் என்பதற்காக எனது மகன் வாயில் தூக்க மாத்திரையை தினித்தோம். மேலும் சங்கிலியை எனது மகனின் கழுத்தில் வைத்து நானும் சுமனும் இருக்கி அவனை கொலை செய்தோம் என்று அந்த சிறுவனின் தாய் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

இதனால் வசந்தாவும் அவரது கள்ளக்காதலனையும் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.