பெற்ற மகளின் தலையை துண்டாக வெட்டி சாலையில் நிர்வாணமாக நடந்து வந்த தாய்..! அவர் எப்படிப்பட்டவர்? வெளியான தகவல்கள்!

பெற்றெடுத்த மகள் என்றும் பாராமல் அவரை கத்தியால் குத்திய தாயார் நிர்வாணமாக சாலையில் நடந்து சென்ற சம்பவமானது உக்ரைன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உக்ரைன் நாட்டில் கார்கிவ் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு டாட்டியானா என்ற 38 வயது பெண் தன்னுடைய அண்ணனுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிறிஸ்டினா என்ற 11 வயதான மகளுள்ளார். வழக்கம் போல தங்களுடைய நடத்தி வந்தார். 

நேற்று முன்தினம் திடீரென்று தன்னுடைய வீட்டு குடியிருப்பில் இருந்து ஒரு பிளாஸ்டிக் பையை கையில் வைத்து கொண்டு நிர்வாணமாக டாட்டியானா பிரதான சாலையில் நடந்து சென்றுள்ளார். அவருடைய கையிலிருந்த பிளாஸ்டிக் பையில் வெட்டப்பட்ட நிலையில் கிறிஸ்டினாவின் தலை இருந்துள்ளது. மேலும் அவருடைய கையில் ரத்தம் படிந்த அரிவாளுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். 

இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்‌. இதனிடையே வீட்டிற்கு சென்று பார்த்தபோது கிறிஸ்டினா தலையிழந்து சடலமாக கிடப்பதை கண்டு அவருடைய மாமா அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்‌. காவல்துறையினர் விரைந்து வந்து கிறிஸ்டினாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். 

பின்னர் டாட்டியானாவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினருக்கு ஏன் டாட்டியானா தான் பெற்ற மகளை கொலை செய்தார் என்பதற்கு எந்த ஒரு தெளிவான துப்பும் துலங்கவில்லை. 

பின்னர் காவல்துறையினர் குடியிருப்புவாசிகளிடவும், டாட்டியானாவின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், " டாட்டியானா தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். சமுதாயத்தில் பெரிதளவு பின்தங்கியது இல்லை. தன்னுடைய குழந்தை மீது பேரன்பு கொண்டிருந்தார். தன்னுடைய குழந்தையின் அனைத்து பள்ளி நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொண்டார். அவர் ஏன் இவ்வாறு இரக்கமற்று குழந்தையை கொலை செய்தார் என்பது தெரியவில்லை" என்று கூறியுள்ளனர்.

ஆகையால் காவல்துறையினர் மன அழுத்தம் ஏற்பட்டதால் கொலை செய்தாரா அல்லது போதையில் கொலை செய்தாரா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது உக்ரைன் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.