தாயை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்த மகளை கொன்று வீட்டுக்கு உள்ளேயே புதைத்த கொடூரம்! 6 வருடங்களுக்கு பிறகு தெரிய வந்த பகீர் உண்மை!

6 வருடங்களுக்கு முன்னால் மாயமானதாக கருதப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ள சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயமுத்தூர் மாவட்டம் திருப்பூரில் உள்ள வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் சகாயராணி. இவருடைய மகளின் பெயர் எஸ்தர் பேபி. இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 2014-ஆம் ஆண்டில் தன்னுடைய தாய் வீட்டிற்கு எஸ்தர் பேபி சென்றுள்ளார்.

அந்த காலகட்டத்தில் சகாயராணி அதே பகுதியை சேர்ந்த பாக்யராஜ் என்பவருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் சகாயராணி தன்னுடைய மகளை, குடும்பத்தை காப்பாற்றி வரும் பாக்கியராஜின் ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். ஆனால் சகாயராணியின் இந்த கீழ்த்தரமான செயல்களுக்கு எஸ்தர் பேபி ஒப்புக்கொள்ளவில்லை.

மேலும் அக்கம் பக்கத்தில் சகாயராணி குறித்து தவறுதலாக எஸ்தர் பேபி பேசி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியான சகாயராணி எஸ்தர் பேபி கொலை செய்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டினார். அதன்படி 2014-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 14-ஆம் தேதியன்று சகாயராணி அவருடைய சகோதரர் சேவியர் அருண் மற்றும் பாக்கியராஜ் ஆகியோர் எஸ்தர் பேபியை கத்தியால் குத்தி கொலை செய்தனர். 

பின்னர் தாங்கள் வசித்து வந்த வீட்டிலேயே எஸ்தர் பேபியை புதைத்துவிட்டனர். யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக 4 நாட்கள் கழித்து மகளை காணவில்லை என்று சகாயராணி அப்பகுதி காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வழக்கை கிடப்பில் போட்டிருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் எஸ்தர்பேபியின் தந்தை, சேவியர் அருண் தன்னுடைய வீட்டிற்கு வந்து சென்ற பின்னர்தான் எஸ்தர் காணாமல் போனார் என்று குற்றம்சாட்டினார். 

அதன்படி மற்றொரு கொலை வழக்கில் சென்னை பள்ளிக்கரணையில் சேவியர் அருண் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை தங்கள் கட்டுப்பாட்டில் அழைத்துவந்த வீரபாண்டி காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணையில் ஈடுபட்ட போது அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார்.

வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட காவல்துறையினர், எஸ்தர்பேபி கொலைக்கு சம்பந்தப்பட்ட சகாயராணி சேவியர் அருண் மற்றும் பாக்யராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது வீரபாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.