பெற்ற மகன்கள் 2 பேருக்கு விஷம் கொடுத்த தாய்..! நீண்ட நேரமாக திறக்கப்படாத வீடு..! உள்ளே சென்றவர்களுக்கு அங்கு காத்திருந்த அதிர்ச்சி! தேனி பகீர்!

குடும்பத்தகராறு காரணமாக குழந்தைகளை கொன்று தாய் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவமானது தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேனி மாவட்டத்தில் சின்னமனூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கருகே அமைந்துள்ள கன்னிசேர்வைபட்டி என்ற இடத்தை சேர்ந்தவர் பிரபு. பிரபுவின் வயது 38. பிரபு ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவருக்கு 8 வருடங்களுக்கு முன்னர் பவித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. பவித்ராவின் வயது 35. 

இத்தம்பதியினருக்கு தர்ஷன் என்ற 7 வயது மகனும், லக்ஷன் என்ற 1.5 வயது மகனும் இருந்தனர். கடந்த 75 நாட்களாக ஊரடங்கு காரணமாக பிரபு அக்கம்பக்கத்தில் கிடைத்த வேலைகளில் பணியாற்றி வந்தார். ஆனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன.

மனமுடைந்த பவித்ரா குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவு எடுத்துள்ளார். நேற்று காலையில் பவித்ராவின் வீடு நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. சந்தேகத்தை அக்கம்பக்கத்தினர் பவித்ராவின் வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது 2 குழந்தைகளும் மயங்கிய நிலை உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 3 பேரையும் மீட்டெடுத்து அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்‌. ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தைகள்  இருவரும் உயிரிழந்தனர். பவித்ரா மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

குடும்பத்தகராறு காரணமாக பவித்ரா இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்று சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.